சினிமா செய்திகள்

வைரமுத்து

null

சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வைரமுத்து ஆதங்கம்

Published On 2023-06-01 13:11 IST   |   Update On 2023-06-01 13:14:00 IST
  • சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
  • இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. சீமான் மற்றும் அவரது கட்சியின் முக்கிய நிர்வாகிகளின் டுவிட்டர் கணக்கு ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளது . மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் டுவிட்டர் கணக்குகளை இந்தியாவில் தற்காலிகமாக தடை செய்து டுவிட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.


சீமான் -வைரமுத்து

சீமானின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் முதல் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீமானுக்கு ஆதரவு தெரிவித்து கவிஞர் வைரமுத்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "வன்மையாகக் கண்டிக்கிறேன்

சுட்டுரையை முடக்கிவிட்டால்

சீமான் தீர்ந்து போவாரா?

வெயிலுக்கு எதிராகக்

குடைபிடித்தால்

காணாமற் போகுமோ கதிரவன்?

கருத்தைக்

கருத்தால் எதிர்கொள்ளுங்கள்;

கை கால்களைக் கட்டாதீர்கள்

கருத்துரிமை இன்னும்

உயிரோடு இருப்பதாக

நம்புகிறவர்களுள்

நானும் ஒருவன்" என்று பதிவிட்டுள்ளார்.



Tags:    

Similar News