சினிமா செய்திகள்

தளபதி 67 படக்குழு

null

தளபதி 67 டைட்டில் என்னவா இருக்கும்..? சரவெடி அப்டேட் கொடுத்த படக்குழு..

Update: 2023-02-02 12:48 GMT
  • இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67-வது படத்தில் நடித்து வருகிறார்.
  • இப்படத்தின் அப்டேட்களை தொடர்ந்து படக்குழு கொடுத்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் தளபதி 67. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


தளபதி 67

தளபதி 67 படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


தளபதி67 போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, தளபதி 67 படத்தின் டைட்டில் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. தொடர்ந்து அப்டேட்கள் குவிந்து வருவதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 


Tags:    

Similar News