null
விஜய்-க்காக மலேசியாவில் கூடும் ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ
- 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது.
- பல்வேறு நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழக அரசியலில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் விஜய். நடிப்பில் பயணித்த வந்த விஜய், ரசிகர் மன்றம் மூலம் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வந்தார். இதனை தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இதனால் நடிப்பில் இருந்து விலகுவதாக கூறி ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' படமே தனது கடைசி படம் என்று கூறியுள்ளார்.
இதனால் 'ஜன நாயகன்' படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், விஜய் போன்ற நடிகனை தமிழ் சினிமா இழப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தின் இசை வெளியீட்டு நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, விழாவுக்கு மலேசியா அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதில், முழுக்க முழுக்க சினிமா சார்ந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக மட்டுமே இருக்க வேண்டும். யாரும் அரசியல் பேச கூடாது. ரசிகர்கள் கட்சி கொடி, டி-சர்ட், துண்டு அணிந்து வரக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை போன்ற நிபந்தனைகளை மலேசிய அரசு விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நாளை நடைபெறும் இசை வெளியீட்டுக்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் மலேசியா புறப்பட்ட வண்ணம் உள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதனால் மலேசியா நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.