சினிமா செய்திகள்

6 மாத ப்ரேக்.. வெளிநாடு பறக்கிறார் சமந்தா

Published On 2023-07-06 10:35 IST   |   Update On 2023-07-06 10:35:00 IST
  • சமந்தா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார்.
  • மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக சமந்தா உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

பானா காத்தாடி, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான், கத்தி, 24, மெர்சல் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சமந்தா. தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும் நடித்துள்ளார். அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் நடித்து பலரின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் சமந்தா நடிப்பில் வெளியான யசோதா மற்றும் சாகுந்தலம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வருகிறார்.



சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சமந்தா நடிப்பதில் இருந்து 6 மாதம் ஓய்வு எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் மயோசிட்டிஸ் நோய் பாதிப்புக்காக வெளிநாட்டில் சிக்கிச்சை பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சமந்தா, மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு ஒரு வருடம் ஆகிறதாக உருக்கமாக பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News