சினிமா செய்திகள்
null

சாய் பல்லவி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Update: 2022-07-03 05:28 GMT
  • சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான ஷியாம் சிங்காராய் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
  • தற்போது கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் கார்கி படத்தில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'பிரேமம்' திரைப்படம் மூலம் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. அதன்பின்னர் விஜய் இயக்கத்தில் வெளியான 'தியா' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். சமீபத்தில் சாய்பல்லவி நடிப்பில் வெளியான ஷியாம் சிங்காராய் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

சாய்பல்லவி

தற்போது இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள திரைப்படம் 'கார்கி'. இந்த படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி மற்றும் பிளாக் ஜெனி புரொடக்‌ஷன் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். 'கார்கி' படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது.

கார்கி

தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராகி உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரீலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளனர். அதன்படி 'கார்கி' திரைப்படம் வருகிற ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.Tags:    

Similar News