சினிமா செய்திகள்

ரஜினிகாந்த் படத்தின் படப்பிடிப்பு.. ரசிகர்கள் ஆரவாரம்

Published On 2023-10-12 11:01 IST   |   Update On 2023-10-12 11:01:00 IST
  • இயக்குனர் ஞானவேல் புதிய படம் ஒன்றை இயக்குகிறார்.
  • இந்த படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் பணகுடியில் நடைபெற்று வருகிறது. பணகுடியில் உள்ள தள ஓடு தயாரிக்கும் சூளையில் படப்பிடிப்பு கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதன் 3-வது நாள் படப்பிடிப்பு இன்று காலை தொடங்கியது. இதனையொட்டி கடந்த 2 நாட்களாக நடிகர் ரஜினிகாந்த் வருகையை எதிர்பார்த்து பணகுடி மங்கம்மாள் சாலையில் ரசிகர்கள் திரண்டு நின்று உற்சாகமாக தலைவா....தலைவா... என கோஷமிட்டனர்.

படப்பிடிப்பின் தொடக்க நாளான நேற்று முன்தினம், வெள்ளை நிற உடையில் வந்த நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களை கண்டதும் காரை நிறுத்தி காரில் அமர்ந்தபடி கையசைத்தும், ரசிர்களுக்கு கை கொடுத்தும் சென்றார்.


நேற்று 2-ம் நாள் படப்பிடிப்பு முடிந்து நடிகர் ரஜினிகாந்த் காரில் வெளியேறியபோது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை பார்த்தவுடன் திறந்த வெளி காரில் எழுந்து நின்று வணக்கம் செலுத்தி கை அசைத்தபடி சென்றார். ரசிகர்கள் உற்சாகத்துடன் ரஜினிகாந்த் செல்வதை செல்போனில் படம் எடுத்தனர்.

முன்னதாக அவர் படப்பிடிப்புக்கு வந்தபோது சாக்லெட் நிற சட்டை அணிந்தபடி தலையில் விக் வைத்து புதிய கெட்டப்பில் நடிப்பதற்காக வந்தார். அவர் காரை விட்டு இறங்கி சென்றபோது ரசிகர்கள் திரண்டு புகைப்படம் எடுத்தனர். பின்னர் அவர் கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இன்று 3-வது நாளாக படப்பிடிப்பு தொடர்வது மக்களிடையே ஆரவாரத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News