சினிமா செய்திகள்
null

சென்னை காமிக் கான்-இல் 2 புத்தகங்களை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்

Published On 2024-02-20 14:47 IST   |   Update On 2024-02-20 14:51:00 IST
  • மதன் கார்க்கியின் மொழி நடை எண்ட்வார்ஸ் தொடருக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
  • புத்தக வெளியீட்டு விழாவின்போது தமிழ் விளம்பர பாடல் வெளியிடப்பட்டது.

சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற காமிக் கான் இந்தியா விழாவில் பிரபல திரைப்பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டு புத்தகங்களை வெளியிட்டார்.

"எண்ட்வார்ஸ்: வால்யூம் 2 – டார்க் கான்குவெஸ்ட்" (Endwars: Volume 2 – Dark Conquest) என்ற ஆங்கிலப் புத்தகம், "எண்ட்வார்ஸ்: தி சூசன் ஒன்" (Endwars: The Chosen One - Volume 1) என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம் "இறுதிப்போர்- மண்ணவன் ஒருவன்" ஆகும். இதில் "இறுதிப்போர் – மண்ணவன் ஒருவன்" புத்தகத்தை மதன் கார்கி மொழிமாற்றம் செய்துள்ளார்.

 


சென்னை காமிக் கண்காட்சியில் புத்தக வெளியீட்டு விழா உற்சாகமாக நடைபெற்றது. இதில் ஏராளமான காமிக் வாசகர்கள் கலந்து கொண்டனர். கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் என நிரம்பியிருந்த அந்த இடம் காமிக் புத்தக ஆர்வலர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

சித்திரக்கதைகளின் வசீகரிக்கும் உலகத்தைக் கொண்டாடும் படைப்பாளிகள் மற்றும் ஆர்வமுள்ள வாசகர்களின் சந்திப்பாக இது அமைந்தது. இந்த விழாவில் பங்கேற்று இந்த 2 புத்தகங்களையும் வாங்கிய வாசகர்களுக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது கையெழுத்திட்ட பிரதிகளை வழங்கினார். 

Tags:    

Similar News