லியோ
- இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படம் வருகிற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'(Leo - Bloody Sweet). இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் விஜய்யும், லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
லியோ
இப்படத்தில் நடிகை திரிஷா, நடிகர் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ,நடிகை பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், இயக்குனர்கள் மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், டான்ஸ் மாஸ்டர் சாண்டி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிக்க உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
லியோ போஸ்டர்
இதையடுத்து இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'லியோ'படத்தின் டைட்டில் டீசர் 20 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
A HUMONGOUS 2️⃣0️⃣ MILLION real-time views! ??
— Sony Music South (@SonyMusicSouth) February 4, 2023
#BloodySweet it is! ??❤️?
➡️ https://t.co/boebmbZSQa #Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @anirudhofficial @Jagadishbliss @sonymusicindia#Thalapathy67TitleReveal #Thalapathy67 #Leo pic.twitter.com/qHshZ5cbwA