சினிமா செய்திகள்

குடும்பத்தை இழந்து தவித்த மாணவி.. பணம் கொடுத்து உதவிய கமல்ஹாசன்

Published On 2023-07-07 18:17 IST   |   Update On 2023-07-07 18:17:00 IST
  • மாணவி அமுதா பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.
  • இவரது குடும்பம் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர்.

சேலம், கல்பாறைப்பட்டி, செவ்வாய் காட்டில் வசித்து வரும் அமுதா என்ற மாணவி பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார். இவரது அம்மா, அப்பா, அக்கா என அனைவரும் ஜூன் மாதம் ஒரு விபத்தில் இறந்து விட்டனர். மொத்த குடும்பத்தையும் இழந்த அமுதா தன் படிப்பிற்கு உதவுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் மாணவி அமுதாவிற்கு ரூ.3 லட்சம் பணம் கொடுத்து உதவியுள்ளார். இதற்கு முன்பு இசையமைப்பாளர் டி.இமான் அந்த மாணவிக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்து விவரங்களை பகிருமாறு கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News