சினிமா செய்திகள்

பிக்பாஸ் சீசன் 6

விபரீதமான டாஸ்க்.. அடிதடியில் முடிந்த பிக்பாஸ்..

Published On 2022-12-01 15:58 IST   |   Update On 2022-12-01 15:58:00 IST
  • பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 53-வது நாட்களை நெருங்கியுள்ளது.
  • இதில் கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறினார்.

பிக்பாஸ் தமிழ் 6-வது சீசன் கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுவரை சாந்தி, ஜி.பி. முத்து, அசல், ஷெரினா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதில் தற்போது 14 நபர்கள் வீட்டினுள் இருக்கின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் 53-வது நாட்களை நெருங்கியுள்ளது.


பிக்பாஸ் சீசன் 6

இதில், இந்த வாரம் பழங்குடியினருக்கும் ஏலியன்களுக்கும் இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்க்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று வெளியான முதல் புரோமோவில் அசீமுக்கும் அமுதவாணனுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதில் அசீம் உனக்கு அவ்வளவு நெஞ்சு உறப்பு இருந்தா அடி.. உனக்கு தைரியம் இருந்தால் அடி என அமுதவாணனின் முகத்திற்கு அருகே கை வைத்து அசீம் கத்துகிறார். இதனுடன் இந்த புரோமோ முடிவடைகிறது. எலியன் - பழங்குடியினர் டாஸ்க் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



Full View


Tags:    

Similar News