சினிமா செய்திகள்

புதிய கட்சி தொடங்கும் விஜய்... எந்த நாளில் தெரியுமா?

Published On 2023-07-24 15:14 IST   |   Update On 2023-07-24 15:14:00 IST
  • நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பில் பல உதவிகளை செய்து வருகிறார்.
  • விஜய் அரசியலுக்கு வருவதற்கு 72.50 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

திரையுலகில் உச்சத்தை தொட்ட எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் தனிப்பெரும் சக்தியாக திகழ்ந்தனர். இன்றைய அரசியலிலும் திரையுலகினர் வலுவாக காலூன்றி உள்ளனர். விஜயகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், சீமான் உள்ளிட்டவர்கள் தனக்கென தனி பாதை அமைத்து அரசியலில் பயணிக்கின்றனர்.

அந்த வரிசையில் இளம் ரசிகர் பட்டாளங்களை தன்வசம் வைத்துள்ள நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை விஜய் மக்கள் இயக்கம் மூலம் தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அதன்படி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக உருவாக்க ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி உள்ளார். சமீபகாலமாக திரைப்படத்தில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசி பலரது கவனத்தை ஈர்த்த விஜய் தன் செயல்பாட்டை வசனத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் அடுத்தகட்ட நகர்வுக்கு மாற்றியுள்ளார்.


இந்த சூழலில் விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டதில் 72.50 சதவீதம் பேர் விஜய்க்கு ஆதரவு அளித்துள்ளனர். மேலும், நடிகர் விஜய், மக்கள் இயக்கம் சார்பாக மாணவர்களுக்கு ஊக்க தொகை, இலவச இரவுநேர பாடசாலை போன்ற பல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி விஜய் புதிய கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News