நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
வெந்து தனிந்தது காடு, காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படங்களில் நடித்த நடிகை சித்தி இட்னானி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து
Happiest Birthday to our #ThalapathyVijay wish you abundant success, joy and happiness always!
— Siddhi Idnani (@SiddhiIdnani) June 22, 2023
- a fan! 🤗
இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பதிவு
நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள செல்லியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடந்தன. வேலூர் பெண்ட்லேன்ட் அரசு மருத்துவமனை மற்றும் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தங்க மோதிரங்கள் மற்றும் குழந்தைகளின் தாய்மார்களுக்கு பிஸ்கெட், பால், பழம் வழங்கினர்.
விஜய்யின் பிறந்தநாள் பரிசாக இரண்டாவது போஸ்டரை லியோ படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் நா ரெடி பாடல் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
விஜய்யின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
லியோ படப்பிடிப்பில் விஜய்யுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வாழ்த்து
தனக்கென ஒரு தனி இடத்தை அமைத்து சினிமாவில் முன்னணி நடிகராய் சிறந்து விளங்கும் தம்பி விஜய் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் - முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிவு
குமரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வழங்கினர். பின்னர் ராமன் புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.