சினிமா செய்திகள்

இதை மாற்றியது யுவன் தான்.. அதர்வா நெகிழ்ச்சி

Published On 2022-07-29 08:30 GMT   |   Update On 2022-07-29 08:30 GMT
  • இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'.
  • இப்படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் 'குருதி ஆட்டம்'. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்ததை அடுத்து சில காரணங்களால் வெளியாகவில்லை. இதையடுத்து 'குருதி ஆட்டம்' திரைப்படம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் அதர்வா பேசியதாவது, இந்த படம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களால் தான் இவ்வளவு அழகாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பல இளம் நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீ கணேஷ் இந்த கதையை சொல்லும் போது, கதையின் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.


அனைத்து கதாபாத்திரத்தையும் கோர்த்து, ஸ்ரீ கணேஷ் நேர்த்தியான திரைப்படமாக மாற்றியுள்ளார். இந்த கதையை சிறப்பான ஒன்றாக மாற்றியது இசையமைப்பாளர் யுவன். இயக்குனர் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து செய்துள்ளார். இந்த படம் ஆகஸ்டு 5-ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார். 

Tags:    

Similar News