சினிமா செய்திகள்

சிம்புவின் "STR49" படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடக்கம்..!

Published On 2025-05-02 21:48 IST   |   Update On 2025-05-02 21:48:00 IST
  • சிம்புவின் 49ஆவது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார்.
  • இதனால் சந்தானம் நடிக்கிறார். சிம்பு ஜோடியாக கயாடு லோஹர் ஒப்பந்தமாகியுள்ளார்.

நடிகர் சிம்பு தற்போது தக்லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அதன்பின் பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இதனால் SRT49 என அழைக்கப்படுகிறது. சிம்புவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.

டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைக்கிறார். சந்தானம் இப்படம் மூலம் மீண்டும் சிம்பு உடன் இணைகிறார்.

இப்படம் மிகப்பெரிய மாஸ் மற்றும் கலக்கலப்பான திரைப்படமாக இருக்கும். வசூல் ராஜா MBBS திரைப்படத்தை போல் ஒரு பக்கா கமெர்ஷியல் ஜாலி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க கல்லூரியில் நடக்ககூடிய திரைப்படமாக இப்படம் உருவாக இருக்கிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை பூஜையுடன் தொடங்குகிறது.

Tags:    

Similar News