சினிமா செய்திகள்

`மிகுந்த மன வேதனையைத் தருகிறது'- நடிகர் ராஜேஷ் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்

Published On 2025-05-29 12:42 IST   |   Update On 2025-05-29 12:42:00 IST
  • பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
  • ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

பிரபல தமிழ்த் திரைப்படம் நடிகர் ராஜேஷ் {76} உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவர் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இவர் 1949 ஆம் ஆண்டு மன்னார்குடியில் பிறந்தார்.1979- ஆண்டில் தமிழ் திரையுலகில் அறிமுகமான ராஜேஷ் 150-க்கு மேற்பட்ட படங்கள், சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார்.

அவள் ஒரு தொடர்கதை, அந்த 7 நாட்கள்,மெட்டி, என்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்தார். கடைசியாக விஜய் சேதுபதி நடித்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மேலும் யூடியூபில் ஓம் சரவண பவ என்ற சேனலின் மூலம் பல ஆன்மிக செய்திகளும், ஆரோக்கிய செய்திகளை , பல மருத்துவர்களை நேர்காணல் செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜேஷ் அவர்களது மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கள் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் "என்னுடைய நெருங்கிய நண்பர், நடிகர் ராஜேஷ் அவர்களின் அகால மரணச் செய்தி எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. மிகுந்த மன வேதனையைத் தருகிறது. அருமையான மனிதர், அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்." என கூறியுள்ளார்.

Tags:    

Similar News