null
Bigg Boss: அப்போ ரஞ்சித்... இப்போ பிரவீன் காந்தி - பிக்பாஸ் வீட்டிற்குள் சர்ச்சை பிரபலம்
- பிக்பாஸ் சீசன் 9 போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
- 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 நாளை முதல் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளன.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
பிக்பாஸ் சீசன் 9 தமிழில் இன்று முதல் தொடங்கும் நிலையில், நேற்று போட்டியாளர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று நடைபெற்ற போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் ஒவ்வொருவரையாக விஜய் சேதுபதி அழைத்து அறிமுகம் செய்து பிரம்மாண்ட வீட்டிற்குள் அனுப்பி வைத்தார்.
இதில், ரட்சகன், ஜோடி, நட்சத்திரம், துள்ளல் ஆகிய படங்களை இயக்கிய பிரவீன் காந்தி போட்டியாளராக அறிமுகம் செய்யப்பட்டார்.
சமீபத்தில் சர்ச்சைக்குரிய வகையில் இணையத்தில் கடும் விமர்சனத்திற்கு பிரவீன் காந்தி உள்ளன நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.
கடந்த முறை இதேபோல் சர்ச்சியாக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்து அடக்கி வாசித்தார். அதே போல் பிரவீன் காந்தி அடக்கி வாசிப்பாரா இல்லை அடித்து விளையாடுவாரா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.