சினிமா செய்திகள்

இந்தியன் - 2 படத்தின் அடுத்த சிங்கிள் அப்டேட்

Published On 2024-05-27 07:36 GMT   |   Update On 2024-05-27 07:36 GMT
  • இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.
  • லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

 28 ஆண்டுகளுக்கு பிறகு ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'இந்தியன் 2 ' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், பாபி சிம்ஹா, சமுத்திரக்கனி என பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். லைகா மற்றும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இந்தியன் இரண்டாம் பாகத்தை குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது.

திரைப்படம் வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான `பாரா பாரா' பாடல் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில். படத்தின் அடுத்த பாடலை மே 29 ஆம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இது குறித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில் சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஒரு கஃபேவில் அமர்ந்தபடி காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் ரொமேண்டிக் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்டின் இசை வெளியீட்டு விழா வரும் ஜூன் 1 ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

படத்தின் முதல் பாகம் போலவே இப்படமும் வெற்றிப்பெரும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதைதொடர்ந்து படத்தின் மூன்றாம் பாகமும் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News