சினிமா செய்திகள்

AI-ஐ தவறாக பயன்படுத்தி பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சி: ராஷ்மிகா மந்தனா

Published On 2025-12-03 15:16 IST   |   Update On 2025-12-03 15:16:00 IST
கண்ணியமான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

ஏஐ தொழில்நுட்பத்தில் பெண்களின் மார்பிங் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்படுவது குறித்து நடிகை ராஷ்மிகா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய அவர்," கண்ணியமான, முற்போக்கான சமூகத்தை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள்.

மக்கள் மனிதர்களை போல் செயல்படாவிட்டால் அவர்களுக்கு மன்னிக்க முடியாத கடுமையான தண்டனைகள் தரப்பட வேண்டும்.

முன்னேற்றத்திற்கான மிகப்பெரிய சக்தியான ஏஐ-ஐ தவறாக பயன்படுத்தி பெண்களை குறிவைப்பது தார்மீக வீழ்ச்சியை காட்டுகிறது" என்றார்.

Tags:    

Similar News