சினிமா செய்திகள்

மகாபாரதம் தொடரில் கர்ணனாக நடித்த பங்கஜ் தீர் காலமானார்

Published On 2025-10-16 03:13 IST   |   Update On 2025-10-16 03:13:00 IST
  • தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பானது.
  • இதில் கர்ணன் பாத்திரத்தில் நடித்த பங்கஜ் தீர் உடல்நலக் குறைவால் காலமானார்.

மும்பை:

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1988-ம் ஆண்டில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பப்பட்டது. பல மாதம் ஒளிபரப்பான இந்தத் தொடருக்கு இன்றும் பல ரசிகர்கள் உள்ளனர்.

இந்தத் தொடரில் கர்ணன் கதாபாத்திரத்தில் நடித்தவர் பங்கஜ் தீர் (68). இவர் சந்திரகாந்தா, கானூன் உள்ளிட்ட டிவி தொடர்களிலும், ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்தார்.

மும்பையில் நடிப்பு பள்ளி ஒன்றை நடத்தி வந்த அவர், தன் சகோதரருடன் இணைந்து பல ஹிந்தி படங்களையும் தயாரித்தார்.

இதற்கிடையே, கடந்த சில மாதமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பங்கஜ் தீர், மும்பை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பங்கஜ் தீர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். மும்பை வீட்டில் வைக்கப்பட்டிருந்த பங்கஜ் தீர் உடலுக்கு உறவினர்களும், ரசிகர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Tags:    

Similar News