"மாமன்" மடியில் காது குத்து..! விழா நடத்தி வாக்குறுதியை நிறைவேற்றிய சூரி
- நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'.
- இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
நடிகர் சூரி நடிப்பில் வெளியாகி உள்ள படம் 'மாமன்'. கடந்த வாரம் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ராஜ்கிரண், சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய்மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகியுள்ளது.
படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக சூரி சமீபத்தில் ஜீ 5 தொலைக்காட்சியில் நடந்த ஒரு நடன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்பொழுது அந்த நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற பஞ்சமி சிறப்பாக நடனமாடினார். மேலும் பஞ்சமி கடந்து வந்த வலி நிறைந்த பாதையை கூறினார்.அப்பொழுது அந்த நிகழ்ச்சியிலே பஞ்சமிக்கு மூன்று மகன்கள் அவர்களுக்கு காதணி விழா நடக்கவில்லை என கூறினார். அதற்கு சூரி " நான் உங்களோட அந்த 3 பசங்களுக்கும் ஒரு தாய் மாமனா இருந்து காதணி விழா நடத்துறேன் என் செலவுல" என கூறினார்".
இந்நிலையில் இன்று சொன்ன வாக்கை காப்பாற்றும் வகையில் அதை நிரூபித்தும் காட்டியுள்ளார். அவரது செலவில் காஞ்சிபுரத்தில் பஞ்சமியின் மூன்று மகன்களுக்கும் தாய் மாமனாக அவரது மடியில் அமர்த்தி அவர்களுக்கு மொட்டை மற்றும் காது குத்தப்பட்டது" இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
பலரும் மேடைக்காக பல வாக்குறுதி கொடுக்கின்றனர் ஆனால் அதை செய்ய தவற விட்டுவிடுவார்கள். ஆனால் தான் சொன்னதை நிறைவேற்றியதற்கு சூரிக்கு நெட்டிச்சன்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.