சினிமா செய்திகள்

அன்பால் நிறைந்த பறந்து போ திரைப்படம் - அட்லீ பாராட்டு

Published On 2025-07-06 11:48 IST   |   Update On 2025-07-06 11:48:00 IST
  • இயக்குனர் ராம் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
  • திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கியவர் இயக்குனர் ராம். இவர் தற்போது 'பறந்து போ' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதில், மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், பறந்து போ படம் குறித்து இயக்குனர் அட்லீ பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் " பறந்து போ திரைப்படம் மிகவும் நெருக்கமாக இருந்தது. ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான உறவை மிக அழகாக காண்பித்து இருந்தனர். படத்தில் இடம் பெற்ற பாடல்கள் நன்றாக இருந்தது. சிவா மற்றும் அஞ்சலி கதாப்பாத்திரம் மிகவும் பிடித்து இருந்தது. கண்டிப்பாக இது அனைத்து மக்களுக்கும் பிடிக்கும். ராம் அண்ணாக்கு வாழ்த்துக்கள்" என கூறியுள்ளார்.

Tags:    

Similar News