சினிமா செய்திகள்
null

Kantara 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Published On 2025-07-07 10:00 IST   |   Update On 2025-07-07 10:04:00 IST
  • கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி அவரே நடித்த திரைப்படம் 'காந்தாரா'
  • இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

கன்னடத்தில் ரிஷப்ஷெட்டி இயக்கி அவரே நடித்த 'காந்தாரா' திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிபெற்றது. அந்த வெற்றியை தொடர்ந்து 'காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. தற்போது 'காந்தாரா-2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.

படத்தில் வேலைப்பார்த்த சிலரின் அடுத்தடுத்த மரணங்கள் நடந்தது. இது காந்தாரா திரைப்படத்தால் தான் இவ்வாறு நடக்கிறது என பேச்சுகள் திரைவட்டாரத்தில் பேசப்பட்டது.இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார்.


இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி திரைப்படம் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகிறது.

Tags:    

Similar News