சினிமா செய்திகள்

விவாகரத்து வழக்கு : ஜெயம் ரவி - ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை

Published On 2024-12-21 13:29 IST   |   Update On 2024-12-21 13:29:00 IST
  • மனு மீதான விசாரணைக்காக இருவரும் இரண்டாவது முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
  • சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகர் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு மீதான விசாரணைக்காக இருவரும் இரண்டாவது முறையாக இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

அப்போது, ஜெயம் ரவி, ஆர்த்தி தம்பதியிடையே சமரச பேச்சுவார்த்தை முடிவடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து, விவாகரத்து வழக்கு தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கின் மறுவிசாரணை 18-ந்தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News