சினிமா செய்திகள்

'இந்தியன் 2 'சேனாபதி' சிறப்பு போஸ்டர் வெளியீடு

Published On 2024-04-14 06:38 GMT   |   Update On 2024-04-14 06:38 GMT
  • கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.
  • மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை புகைப்பட 'போஸ்டர்' மூலம் விளக்குவதாக அமைந்துள்ளது.


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996 -ல் நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த 'இந்தியன்' திரைப்படம் 28 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் ரசிகர்களிடம் இப்படம் பெரும் வரவேற்பு பெற்று வசூல் சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்தியன்- 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்தது.இதைதொடர்ந்து இயக்குனர் ஷங்கர் 'இந்தியன் - 2' படத்தில் கமலை மீண்டும் கதாநாயகனாக இயக்க தொடங்கினார்.
இப்படத்தை  லைக்கா மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்தன.

இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் இந்தியன் படத்தில் கமலுடன் நடித்த மனீஷா கொய்ராலாவை மீண்டும் 'இந்தியன் - 2' படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு நடந்தது. இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் மும்பை சென்ற போது மனீஷாவை நேரில் சந்தித்து இது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தினார்.

விரைவில் கமல், மனீஷா கொய்ராலா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கபட உள்ளன. அந்த காட்சிகளை படத்தில் இணைத்து ஜூன் மாதம் 2- ந்தேதி "இந்தியன் 2" படத்தை 'ரிலீஸ்' செய்ய படக்குழு திட்டமிட்டு உள்ளது.
இந்நிலையில் கமலின் 'இந்தியன் 2 ' படத்தின் தயாரிப்பாளர்கள் இன்று தமிழ் புத்தாண்டை யொட்டி சிறப்பு 'போஸ்டர்' வெளியிட்டுள்ளனர்அந்த புதிய போஸ்டரில் இரட்டை வேடத்தில் கமல் நடிக்கும் கதாபாத்திரத்தின் பிரேம்கள் காட்டப்பட்டுள்ளன.

அதில் கமல் பழங்கால பாணியில் தொப்பி, காக்கி சீருடை அணிந்தும், இன்னொரு கமல் வெள்ளை சட்டை அணிந்து வர்மக்கலைஞர் போன்றும் போஸ் கொடுத்துள்ளனர்.

"இந்தியன்-2 ல் மக்களிடம் ஊழல் விழிப்புணர்வு ஏற்படுத்த மீண்டும் 'சேனாபதி' தயாராகி விட்டார்" என்பதை இந்த புகைப்பட 'போஸ்டர்' மூலம் நமக்கு விளக்குவதாக  அமைந்துள்ளது.


உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News