சினிமா செய்திகள்

எம்மி விருதுகள் 2025: மிகக்குறைந்த வயதில் சிறந்த துணை நடிகர் விருது வென்று 'Adolescence' நாயகன் சாதனை

Published On 2025-09-16 03:30 IST   |   Update On 2025-09-16 03:30:00 IST
  • வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது.
  • சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

ஸ்டீபன் கிரஹாம், ஜாக் தோரேன் இணைந்து இயக்கிய 'Adolescence' என்ற நெட்பிலிப்ஸ் தொடர் உலகம் முழுவதும் பெரும் வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இந்தத் தொடர், வெளியான முதல் மூன்று மாதங்களில் நெட்பிளிக்ஸில் 140 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. இதன் ஒவ்வொரு எபிசோடும் ஒரே தொடர்ச்சியான ஷாட்டில் படமாக்கப்பட்டது.

லண்டனில் நடக்கும் 'Adolescence' தொடர் கதைக்களத்தில் சக பள்ளி மாணவியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஜேமி என்ற கதாபாத்திரத்தில் 15 வயதான இளம் நடிகர் ஓவன் கூப்பர் நடித்திருந்தார்.

 இந்நிலையில் அவர் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற எம்மி விருதுகள் விழாவில் அவர் விருது வென்றுள்ளார். எம்மி விருது வரலாற்றில் சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்ற இளைய நடிகர் என்ற சாதனையை ஓவன் கூப்பர் படைத்துள்ளார்.

திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு எம்மி விருதுகள் ஆகும்.

இந்த வருட எம்மி விழாவில், 'Adolescence' தொடர் பல முக்கிய விருதுகளை வென்றது.

சிறந்த தொடர், சிறந்த இயக்கம், சிறந்த எழுத்து, சிறந்த நடிகர் (ஸ்டீபன் கிரஹாம்) மற்றும் சிறந்த துணை நடிகை (எரின் டோஹெர்ட்டி) ஆகிய பிரிவுகளிலும் விருதுகளை அள்ளியது. 

Tags:    

Similar News