- மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான்.
- இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
மலையாள சினிமா முன்னணி நடிகர்களுள் ஒருவர் துல்கர் சல்மான். இவர் கடைசியாக நடித்து வெளியான லக்கி பாஸ்கர் படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக துல்கர் சல்மான் காந்தா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செல்வமணி செல்வராஜ் இயக்குகிறார்.
இப்படத்தில் மிஸ்டர் பச்சன் திரைப்பட புகழ் பாக்யஸ்ரீ, துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை வேஃபாரர் பிலிம்ஸ் மற்றும் ராணா ஸ்பிரிட் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கவுள்ளது.
இந்நிலையில் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நாளில் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி திரைப்படம் வெளியாக இருக்கிறது.
கடந்த ஆண்டும் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படமும் துல்கரின் லக்கி பாஸ்கர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகி இரண்டுமே பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. அதேப்போல் இந்த முறையும் இந்த இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.