சினிமா செய்திகள்

'வீட்டுல போய்ட்டு நான் விழணும்'... ஷாலினி அஜித்குமார் பகிர்ந்த க்யூட் வீடியோ

Published On 2025-08-09 20:49 IST   |   Update On 2025-08-09 20:49:00 IST
  • 2000-ம் ஆண்டு அஜித்குமார் - ஷாலினி திருமணம் செய்துகொண்டனர்.
  • இந்த தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இயக்குநர் சரண் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு வெளியான அமர்க்களம் படத்தில் சேர்ந்து நடித்தபோது அஜித் குமார், ஷாலினி இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து 2000-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

அஜித்குமார் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

இந்நிலையில், ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டா பக்கத்தில் க்யூட் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், பூஜை ஒன்றில் அஜித்குமார் காலில் விழ ஷாலினி முயல்கிறார். அதை அஜித் வேண்டாம் என்று கூற, சுற்றி உள்ளவர்கள் காலில் விழுமாறு கூறுகிறார்கள். இதனையடுத்து ஷாலினி அஜித்குமார் காலில் விழுந்து வணங்குகிறார். உடனே அஜித்குமார் வீட்டுல போய்ட்டு நான் விழணும் என்ற கூற சிரிப்பலை எழுந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News