சினிமா செய்திகள்
null

Video: எல்லாரும் சந்தோசமா வாழுங்க.. கார் ரேஸ்-க்கு இடையே ரசிகர்களுக்கு அஜித் கூறிய செய்தி

Published On 2025-01-20 10:27 IST   |   Update On 2025-01-20 13:22:00 IST
  • நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.
  • கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

துபாயில் நடந்த 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித் குமார், இந்திய தேசியக் கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரது வெற்றிக்கு ரசிகர்கள், திரைத்துறையை சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில், நடிகர் அஜித்குமார் அடுத்ததாக 'தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025' ரேஸில் பங்கேற்றுள்ளார்.

ஐரோப்பாவில் நடைபெறும் போர்ஷே ஸ்ப்ரிண்ட் தொடரின் தகுதி சுற்றில் 1.41 நிமிடத்தில் லேப்சை நடிகர் அஜித் குமார் நிறைவு செய்தார். இதன்மூலம், கார் ரேஸின் முதல் தகுதி சுற்றில் நடிகர் அஜித்குமார் தேர்வாகியுள்ளார்.

தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025 ரேஸின்போது, "ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு அஜித் தமிழில் பதில் அளித்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில், "எல்லாரும் ஆரோக்கியமா சந்தோசமா வாழுங்க. LOVE YOU ALL" என்று அஜித் தெரிவித்தார்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

Tags:    

Similar News