சினிமா செய்திகள்

'துப்பறிவாளன் 2' படம் மூலம் இயக்குனராகும் நடிகர் விஷால்

Published On 2024-03-17 06:39 GMT   |   Update On 2024-03-17 06:39 GMT
  • 'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்
  • துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .

ஆக்ஷன் கிங்' அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியை தொடங்கியவர் விஷால். அதன் பிறகு 2004 -ல் 'செல்லமே' என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல தொடக்கத்தை தந்தது.

அதன்பின் 2005- ல் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் 'சண்டைக்கோழி' படத்தில் நடித்து சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.இந்த படம் அவருக்கு திருப்பு முனையை தந்தது.

'திமிரு', தாமிரபரணி, மலைக்கோட்டை என பல வெற்றிப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது 'துப்பறிவாளன்- 2' படம் மூலம் புதிய இயக்குநராக மாறி இருக்கிறார். 

இது தொடர்பாக அவர் தனது ' எக்ஸ்' இணையதளத்தில் வெளியிட்டு உள்ள வீடியோவில் கூறி இருப்பதாவது:-


 



" எனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு எனது கனவு, எனது லட்சியம், வாழ்க்கையில் நான் என்னவாக வேண்டும் என்ற எனது முதல் எண்ணம் தற்போது நிறைவேறி உள்ளது.நான் ஒரு புதிய பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன். என் வாழ்க்கையில் மிகவும் சவாலான ஒரு அறிமுக இயக்குனர் பொறுப்பை அடைய போகிறேன்.

'துப்பறிவாளன் - 2.' படத்தின் மூலம் முதல் பட இயக்குனர் ஆக லண்டன், அஜர்பைஜான், மால்டாவுக்கு செல்கிறேன்.இதனை விளக்க வார்த்தைகள் இல்லை, ஆனால் என் அப்பாவை நினைவு கூர்கிறேன் . ஜி.கே. ரெட்டி மற்றும் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சார். கடின உழைப்பு எப்போதும் தோல்வி அடையாது.

எது வந்தாலும் பரவாயில்லை, உங்கள் கனவுகளை விடாப்பிடியாகவும், தொடர்ச்சியாகவும் தொடருங்கள், ஒரு நாள் அது நனவாகும்.ஒரு நடிகனாக இந்த அடையாளத்தை எனக்குக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. துப்பறிவாளன்- 2 க்கு ஆதரவு தொடரும் என நம்புகிறேன் .

ஒரு இயக்குனராகவும் எனது கனவை முன்னெடுத்துச் சென்ற மிஸ்கின் சாருக்கு நன்றி. கவலை வேண்டாம் நிஜ வாழ்க்கையிலோ அல்லது ரீல் வாழ்க்கையிலோ நான் யாரையும் கைவிடுவதில்லை. இலக்கை அடையவோம் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News