சினிமா செய்திகள்

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கைதி படத்தை காண மலேசியா சென்றார் நடிகர் கார்த்தி

Published On 2025-11-04 10:47 IST   |   Update On 2025-11-04 10:47:00 IST
  • 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது
  • மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

மாநகரம், மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான 'கைதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

'கைதி' திரைப்படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் ரீமேக் ஆகி வெளியானது. தற்போது மலாய் மொழியில் கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள BANDUAN படத்தின் டீசர் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 'கைதி' படத்தின் மலாய் ரீமேக் 'BANDUAN' படத்தை பார்க்க நடிகர் கார்த்தி மலேசியா சென்றுள்ளார்.

திரையரங்குகளில் நவ.6 ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் சிறப்புத் திரையிடல் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. BANDUAN படத்தின் கதாநாயகனுடன் நடிகர் கார்த்தி சந்தித்து பேசி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Tags:    

Similar News