சினிமா செய்திகள்

த.வெ.க மாநாட்டில் விஜய் கூறிய குட்டிக்கதை

Published On 2025-08-21 18:00 IST   |   Update On 2025-08-21 18:00:00 IST
  • மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் சிறப்பாக உரையாற்றினார்.
  • தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

மதுரையில் நடைபெற்ற தவெக 2-வது மாநில மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய் மிகவும் மாஸாக உரையாற்றினார். மக்கள் ஆரவாரம் செய்தனர். அப்பொழுது ஒரு குட்டி கதை ஒன்றை கூறினார்.

தனது வழக்கமான ஸ்டைலில் அவர் கூறிய கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இது தொடர்பாக விஜய் பேசுகையில், "ஒரு நாட்டில் ஒரு ராஜா, தனக்கு பக்க பலமாக இருக்க ஒரு தளபதியை தேடுகிறார். சரியான தகுதிகளுடன் 10 பேர் தேர்வாகின்றனர். அதில் ஒருவர் தான் தேர்வாக வேண்டும். ஆனால் 10 பேர் தேர்வாகியிருப்பதால், அவர்களுக்கு ஒரு டெஸ்ட் வைக்கிறார். அவர்களிடம் 3 மாதத்தில் ஒரு விதையை கொடுத்து அதை நன்றாக வளர்த்து கொண்டு வாருங்கள் என அனுப்புகிறார். 3 மாதம் கழித்து வரும்போது, அதில் ஒருவர் அந்த விதை நெல்லை ஆளுயரத்துக்கும், மற்றொருவர் தோள் உயரத்துக்கும் என 9 பேர் நன்றாக வளர்த்து கொண்டு வந்தனர்.

அதில் ஒருவர் மட்டும் வெறும் கையுடன் வந்தார். என்ன என கேட்டபோது, 'நானும் தண்ணீர் ஊற்றி ஊற்றி பார்க்கிறேன். நெல் வளரவேயில்லை' என்றார். உடனே ராஜா அவரை கட்டியணைத்து நீ தான் என்னுடைய தளபதி, எல்லா அதிகாரமும் உனக்கு தான் என்றார். காரணம் 10 பேரிடமும் ராஜா கொடுத்தது அவித்த விதை நெல். அது ஒருபோதும் முளைக்காது. அப்படி நீங்கள் எந்த தளபதியை தேர்ந்தெடுக்க போகிறீர்கள். தலைவனுக்கு முக்கியமான அடிப்படை உண்மையாக இருப்பது" என கூறினார்.

Tags:    

Similar News