சினிமா செய்திகள்

என்னது கோட் படத்துல 3 விஜய்யா? சொல்லவே இல்ல

Published On 2024-05-27 11:55 GMT   |   Update On 2024-05-27 11:55 GMT
  • இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.
  • அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் லியோ படத்திற்கு பிறகு தற்போது தி கோட் (THE GREATEST OF ALL TIME) திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படம் சைஃபை டைம் டிராவல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வருகிறது. மேலும் இந்த படமானது 2024 செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், விசில் போடு எனும் பாடல் போன்றவை வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

அடுத்ததாக படத்தின் இரண்டாம் பாடலை ஜூன் மாதத்தில் வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ரஷ்யா, திருவனந்தபுரம், சென்னை போன்ற பகுதிகளில் பரபரப்பாக நடைபெற்று வந்த நிலையில் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

அதேசமயம் இந்த படத்தின் 50 சதவீத டப்பிங் பணிகளையும் நடிகர் விஜய் நிறைவு செய்துள்ளார். படத்தின் விஎஃப்எக்ஸ் பணிகளும் நிறைவடைந்ததாக சமீபத்தில் வெங்கட் பிரபு அறிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடங்களில் அப்பா, மகன் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்று ஆரம்பத்திலேயே தகவல் வெளியானது. அதன்படி அப்பாவாக நடிக்கும் விஜய்க்கு நடிகை சினேகா ஜோடியாகவும் மகனாக நடிக்கும் விஜய்க்கு நடிகை மீனாட்சி சௌத்ரி ஜோடியாகவும் நடிக்கின்றனர்.

ஏற்கனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில் இதன் கூடுதல் தகவல் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் விஜய், இரட்டை வேடங்களில் அல்லாமல் மூன்று வேடங்களில் நடிப்பதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது.

மூன்றாவதாக நடிக்கும் விஜய்யின் கதாபாத்திரத்தை படக்குழு சர்ப்ரைஸாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது தொடர்பான அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News