இன்று ஒரே நாளில் வெளியான 3 திரைப்படங்கள்- மக்கள் மனதை வென்ற காமெடி நடிகர் யார்?
- ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல்.
- தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார்.
காமெடி நடிகராக இருந்து கதாநாயகனாக மாறியுள்ள சூரி நடித்துள்ள 'மாமன்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படத்தை பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார்.
இத்திரைப்படத்தில் சூரியுடன், சுவாசிகா, ராஜ்கிரண், ஜெய பிரகாஷ் மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் தாய் மாமனுக்கும் 6 வயது சிறுவனுக்கும் இடையே உள்ள பாசப்பந்தத்தை விவரிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்து வருகிறார். நகைச்சுவை கதாபாத்திரத்துடன், கதையின் நாயகனாக நடித்த மண்டேலா, பொம்மை நாயகி, கோலமாவு கோகிலா போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.
இந்த நிலையில் தற்போது ஜோரா கைய தட்டுங்க என்னும் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை விநீஷ் மில்லினியம் இயக்கியுள்ளார். வாமா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஜாகிர் அலி இப்படத்தை தயாரித்துள்ளார். எஸ்.என். அருணகிரி இசையமைகத்துள்ளார் இத்திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
ப்ரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள திரைப்படம் டிடி நெக்ஸ்ட் லெவல். இப்படத்தில், இயக்குநர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், நடிகர் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த மூன்று திரைப்படங்களின் கதாநாயகர்களான யோகி பாபு, சூரி, சந்தானம் சினிமா துறையில் முன்னணி நகைச்சுவை நடிகர்களாக தங்களை தக்க வைத்துள்ளனர்.
காமெடியில் மட்டும் நாங்கள் கில்லாடிகள் இல்லை, கதாநாயகராகவும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று மூன்று பேரும் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதுவும் இவர்கள் நடித்த திரைப்படங்களும் இன்று ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், இன்று ரிலீஸ் ஆன மூன்று படங்களில் மக்கள் மனதை கவர்ந்த கதாநாயகன் யார் என்று பார்ப்போம...
சூரி நடித்து வெளியான மாமன் திரைப்படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும் உணர்வுப்பூவமான கதையாக அமைந்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அடுத்ததாக, சந்தானம் நடித்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் த்ரில்லர் காமெடி திரைப்படங்கள் பட்டியலில் இணைந்துள்ள டிடி நெக்ஸ்ட் லெவல்.
தொடர்ந்து, யோகி பாபுவின் ஜோரா கைய தட்டுங்க திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றுள்ளது.