சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயன், கமல்ஹாசன்,

மாவீரனாக மாறும் சிவகார்த்திகேயன்

Published On 2022-05-20 10:03 GMT   |   Update On 2022-05-20 10:03 GMT
சிவகார்த்திகேயனை வைத்து கமலின் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் வெளியான டான் திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அயலான், சிங்கப்பாதை, எஸ்கே20 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.


எஸ்கே21

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்.கே.21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன்பு கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் திரைப்படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்பட உள்ளது. 

இந்நிலையில், இப்படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு மாவீரன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
Tags:    

Similar News