சினிமா
ரஜினிகாந்த்

வெளிநாடுகளில் ஆதிக்கம் செலுத்தும் ‘அண்ணாத்த’

Published On 2021-11-02 13:29 GMT   |   Update On 2021-11-02 13:29 GMT
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் 2 நாட்களே எஞ்சி உள்ளதால் வெளியீட்டுப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1119 திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 572 திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. 


அண்ணாத்த படக்குழு

இதுதவிர, ஐக்கிய அரபு நாடுகளில் 83, மலேசியாவில் 110, இலங்கையில் 60, ஆஸ்திரேலியா 70, நியூசிலாந்தில் 14, ஐரோப்பிய நாடுகளில் 135, இங்கிலாந்தில் 35, சிங்கப்பூரில் 23, கனடாவில் 17 என மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை 'அண்ணாத்த' திரைப்படம் பெற்றுள்ளது.
Tags:    

Similar News