மிஸ்டர்.லோக்கல் படத்தை தொடர்ந்து நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்திருக்கிறார்கள்.
நயன்தாராவின் அடுத்த படம் ரிலீசாகும் தேதி அறிவிப்பு
பதிவு: மே 19, 2019 15:41
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள மிஸ்டர்.லோக்கல் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை ஜூன் 14ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் இப்படத்தை சக்ரி டோலட்டி இயக்கி இருக்கிறார். இந்த படம் `ஹஷ்' என்ற ஹாலிவுட் படத்தை தழுவி உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
Related Tags :