சினிமா

ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை - விஜய்

Published On 2019-04-10 14:33 GMT   |   Update On 2019-04-10 14:33 GMT
ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை என்று இயக்குனர் விஜய், வாட்ச்மேன் படம் பற்றி கூறியிருக்கிறார். #Watchman #Vijay
விஜய் வெவ்வேறு வகையிலான முயற்சிகளை செய்தாலும், அது வெறும் சோதனைகளாக மட்டும் நின்று விடாமல், அவரது திறமையை பறைசாற்றுகிறது. திரில்லர், வரலாற்று காதல் படம், நகைச்சுவை படங்கள் என வித்தியாசமான படங்களை கொடுத்த அவர், 'வாட்ச்மேன்' மூலம் புதிய ஒரு களத்தில் தனது திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படம் குறித்து விஜய் கூறும்போது, "துல்லியமாக சொல்வதென்றால், என் ஆரம்ப கட்டத்தில் இருந்தே வேறு வேறு வகையிலான திரைப்படங்களை உருவாக்க நான் முயற்சிக்கிறேன். பிரபலமான ஒரு ஹீரோவுடன் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ஒரு திரில்லர் படத்தை எடுக்கும் எண்ணம் எனக்கு இருந்தது. அது தான் இந்த படம் உருவாக ஒரு விதையாக இருந்தது. படத்தின் தலைப்பை வைத்தே படம் எந்த மாதிரியான படம் என்பதை ரசிகர்கள் யூகித்திருப்பார்கள் என நான் நம்புகிறேன். 2 நாட்களில் நடக்கும் இந்த திரில்லர் கதையில் கதாபாத்திரங்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் வகையில் திரைக்கதை இருக்கும்" என்றார்.



ஜி.வி.பிரகாஷ் இந்த படத்தில் நாயகனாக நடிப்பதை பற்றி விஜய் கூறும்போது, "நானும், ஜி.வி.பிரகாஷும் நீண்ட காலமாக இணைந்து பயணித்து வருகிறோம், கிட்டத்தட்ட 11 படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். அவருடைய இசை மிகச்சிறப்பாக இருக்கும். பாலா சார் இயக்கிய நாச்சியார் படத்தில் அவரை பார்த்து வியந்தேன். அவரை தவிர இந்த கதாபாத்திரத்துக்கு யாரையும் யோசிக்க முடியவில்லை. இந்த படத்திற்காக அவர் மிகவும் கடுமையான உழைத்தார். நிறைய ரிஸ்க் எடுத்தார். குறிப்பாக, ஒரு நாய் உடன் இணைந்து நடிக்க பொறுமை தேவை, ஜி.வி.பிரகாஷின் ஒத்துழைப்பு இல்லாமல் இது சாத்தியமே இல்லை" என்றார்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இந்த படத்தின் பின்னணி இசைக்காக புதிய பாணியை முயற்சித்துள்ளார். அவரது விளம்பரப் பாடல் ஏற்கனவே ஆன்லைன் மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ளது. நிரவ் ஷா மற்றும் சரவணன் ராமசாமி ஆகியோர் ஒளிப்பதிவில், அருண்மொழி மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படம், வரும் ஏப்ரல் 12ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
Tags:    

Similar News