சினிமா

அஜித்தை கவர்ந்த படம்

Published On 2019-03-02 15:01 IST   |   Update On 2019-03-02 15:01:00 IST
எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தில் ரீமேக்கில் நடித்து வரும் அஜித்திடம் சமீபத்தில் போனி கபூர் எகிப்து மொழிப் படமொன்றை போட்டு காட்ட, அந்த படம் அஜித்தை கவர்ந்ததாம். #AjithKumar #Thala59 #Thala60
‘பிங்க்‘ படத்துக்குப் பிறகு, சின்ன இடைவெளி இருந்தால் நல்லது என்று வினோத் கேட்க அஜித் சம்மதம் சொல்லிவிட்டார்.

சமீபத்தில் தன் வீட்டுக்கு வந்த அஜித்திடம் போனிகபூர், ‘ஹெப்டா தி லாஸ்ட் லெக்சர்’ என்ற எகிப்திய படத்தை திரையிட்டு காட்டியிருக்கிறார். அந்த படத்தை பார்த்து அசந்துபோன அஜித், தமிழில் இந்த படத்தை ரீமேக் செய்யலாம், உரிமை யாரிடம் இருக்கிறது என்று கேட்டிருக்கிறார்.



ஏற்கனவே, வெளிமொழி உரிமையை வாங்கி விட்டதாக போனிகபூர் சொல்ல, அஜித்துக்கு சந்தோ‌ஷம் தாங்கவில்லை. வினோத், அடுத்த படத்துக்கான வேலையில் இறங்க, எகிப்திய திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை ‘சிறுத்தை’ சிவா இயக்குவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் படக்குழு இதனை உறுதி செய்யவில்லை. #AjithKumar #Thala59 #Thala60 #HVinoth #HeptaThe LastLecture 

Similar News