சினிமா

அரசு பேருந்தில் பேட்ட படம் ஒளிபரப்பு - ரஜினி ரசிகர்கள் புகார், விஷால் கண்டனம்

Published On 2019-01-21 03:57 GMT   |   Update On 2019-01-21 03:57 GMT
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான ‘பேட்ட’ படத்தை அரசுப் பேருந்தில் திரையிட்டதற்கு ரஜினி ரசிகர்கள் புகார் தெரிவித்த நிலையில், நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார். #Petta #Rajinikanth #Vishal
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், திரிஷா நடித்த பேட்ட படம் கடந்த 10-ந் தேதி வெளியானது. படம் ரிலீசான சில மணி நேரங்களில் இணையதளத்திலும் வெளியானது.

இந்த நிலையில் கரூரில் இருந்து சென்னை சென்ற தமிழக அரசு பேருந்து ஒன்றில் பேட்ட படம் திருட்டுத்தனமாக ஒளிபரப்பானது. இதைப்பார்த்த ரஜினி ரசிகர்கள் அது குறித்து தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.ரஜினி ரசிகர்களின் புகார் டுவீட்டை பார்த்த விஷால் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:-


‘பைரசி தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். அரசு பேருந்துகளில் திருட்டு டிவிடிகள் மூலம் படம் காண்பிக்கப்படுவதற்கான ஆதாரம் இதோ உள்ளது’ என்று தெரிவித்துள்ளார். பேட்ட படத்தை திருட்டுத்தனமாக ஒளிபரப்பிய அரசு பேருந்தை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். #Petta #Rajinikanth #PettaPiracy #Vishal

Tags:    

Similar News