சினிமா

சமூக வலைதளத்தில் கோபப்பட்டது குறித்து ரகுல் ப்ரீத் சிங் விளக்கம்

Published On 2019-01-19 12:28 GMT   |   Update On 2019-01-19 12:28 GMT
சமூக வலைதளங்களில் வைரலான ரகுல் ப்ரீத் சிங்கின் புகைப்படத்தால் கடுப்பாகி கடுமையான சொற்களை பயன்படுத்தியது குறித்து ரகுல் விளக்கம் அளித்துள்ளார். #RakulPreetSingh #Dev
தமிழ், தெலுங்கு என 2 மொழியிலும் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் ’தேவ்’ பட புரமோ‌ஷனுக்காக அளித்த பேட்டி:

கார்த்தியுடன் 2 வது முறையாக இணைந்தது பற்றி?

தீரன் படத்தில் இருந்து தேவ் படம் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது முழுக்க முழுக்க காதல் கதை. மேக்னா என்னும் துடிப்பான பெண்ணாக நடித்துள்ளேன். என் பெயரை கூட நானே தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சுதந்திரமானவள். நிஜத்தில் நான் அப்படியே நேர் எதிரானவள். கார்த்தி பயணங்களை விரும்புபவராகவும் நான் வேலையை விரும்புபவளாகவும் என 2 எதிர் துருவங்களாக வருகிறோம். இருவரும் இணைவதுதான் கதை.

சமூகவலைதளங்களில் திடீர் என்று கோபப்பட்டது ஏன்?

நான் குறைவான ஆடையில் வரும் படத்தால் ஏற்பட்ட சர்ச்சையை கேட்கிறீர்களா? அந்த படமே எனது அனுமதி இல்லாமல் எடுத்து பகிரப்பட்டது. அந்த படத்துக்கு நான் எப்படி பொறுப்பாவேன். படத்துக்கு வந்த கமெண்டுகள் என்னை காயப்படுத்தின. எனவே கோபப்பட்டேன். சிலரின் வாயை அடைக்க நான் கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டியதாகிவிட்டது. கமெண்டு செய்த நபருக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது என்பதை உணர்த்தவே அப்படி செய்தேன். அந்த நபர் இனி அப்படி கமெண்ட் அடிக்க மாட்டார் என்று நம்புகிறேன். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் இது போன்ற தொந்தரவுகளுக்கு துணிச்சலாக பதிலடி கொடுக்கவேண்டும்.



இந்தியில் நடிக்கும் அனுபவம்?

தமிழ், இந்தி என்று பிரிக்காதீர்கள். திறமையை மட்டும் பாருங்கள். ஸ்ரீதேவி, டாப்சி, தபு, மதுபாலா என்று இங்கு இருந்து இந்திக்கு சென்று சாதித்து காட்டி இருக்கிறார்கள்.

ஸ்ரீதேவி பயோபிக்கில் நடிப்பதாக செய்தி வந்ததே?

எனக்கு பயோபிக் படங்களில் நடிப்பது மிகவும் பிடிக்கும். யாராக நடிக்கிறேன் என்பது எனக்கு பிரச்சினை இல்லை. சாவித்திரி வாழ்க்கை படம் போன்ற படங்கள் அதிகமாக வரவேண்டும். ஸ்ரீதேவி படம் பற்றி இன்னும் யாரும் என்னை அணுகவில்லை. அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் நிச்சம் நடிப்பேன்.

சூர்யா, கார்த்தி ஒப்பிட முடியுமா?

இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவருடனும் பணிபுரிவது ஜாலியாக இருந்தது. இருவரில் யார் சிறந்தவர் என்ற கேள்விக்கே இடம் இல்லை.

இயக்கம், தயாரிப்பில் ஈடுபடுவீர்களா?

படம் தயாரிக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. இயக்கத்தில் ஈடுபடும் அளவுக்கு என்னிடம் கற்பனைத்திறனும் கிடையாது. கேமராவுக்கு முன்பு நிற்கவே விரும்புகிறேன். #RakulPreetSingh #Dev

Tags:    

Similar News