சினிமா

தூங்கும் போது திரிஷா கன்னத்தை கிள்ளிச் சென்றார் - துருவ் விக்ரம்

Published On 2019-01-04 15:07 IST   |   Update On 2019-01-04 15:37:00 IST
‘வர்மா’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் துருவ் விக்ரம், திரிஷாவுடன் நடிக்க ஆசைப்படுவதாகவும், நான் தூங்கும் போது அவர் கன்னத்தை கிள்ளிச் சென்றதாகவும் கூறியுள்ளார். #DhruvVikram #Trisha
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்த படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘வர்மா’ படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. படத்தை பிப்ரவரியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. 



இந்நிலையில், ‘எந்த நடிகையோடு நடிக்க ஆசை?’ என துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறுவயதில் இருந்தே திரிஷாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரைச் சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை பிரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார். #DhruvVikram #Trisha #Varma

Tags:    

Similar News