சினிமா

சென்சாரில் அரசியல் இருக்கிறது - அரவிந்த் சாமி

Published On 2018-12-23 07:02 GMT   |   Update On 2018-12-23 07:02 GMT
தமிழ் சினிமாவில், கதாநாயகன், வில்லன் என்று பெயர் பெற்ற நடிகர் அரவிந்த் சாமி, சென்சாரில் அரசியல் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். #ArvindSwami
மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படம் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. ரோஜா, பம்பாய், மின்சார கனவு போன்ற படங்களில் நடித்தவர் தற்போது ரீ எண்ட்ரியில் வில்லனாக நடித்து வருகிறார். பத்திரிகை நடத்திய மாநாட்டில் நடிகர் அரவிந்த் சாமி கலந்துகொண்டார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார்.

கேள்வி:- மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்தது ஏன்?

பதில் நான் நடிகனாக வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை. அது தற்செயலாக நடந்த விபத்து. பணம் கிடைக்கிறதே என விளம்பரப் படங்களில் நடித்து வந்தேன். அதை பார்த்து தளபதி படத்தில் நடிக்க மணிரத்னம் என்னை அழைத்தார். எனக்கு என்ன வரும், வராது என்பது மணிரத்னத்திற்கு நன்றாக தெரியும். எங்களுக்குள் நல்ல புரிதல் இருக்கிறது. அவரிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவருடைய படப்பிடிப்பின் போது தளத்தில் ஒரு ஒழுங்கு இருக்கும். அதன் மூலம் தான் நான் நடிக்க கற்றுக்கொண்டேன்.

கேள்வி:- இன்றைய சினிமாவுக்கு இருக்கும் முக்கிய பிரச்சினை என்ன?

பதில்:- சென்சார் போர்டு என்ற அமைப்பு இப்போதும் இருக்கிறது. ஆனால் அவர்கள் வகுத்துள்ள வரையறைகள் இன்றைய கால சூழலுக்கு ஏற்புடையதாக இல்லை.

தமிழ் சினிமாவில் ஒரு ஆணும் பெண்ணும் முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்தால் யூ சான்றிதழ் கிடைக்காது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றிய படங்களுக்கு யூ சான்று கிடையாது. அதேபோல அன்பை வெளிப்படுத்தும் முத்தக்காட்சிக்கும் அனுமதி கிடையாது.



சென்சாரில் அரசியல் இருக்கிறது. இங்கே நிறைய கோபக்கார கும்பல் இருக்கிறது. நாங்கள் அவர்களுடைய உணர்வுகளை புண்படுத்த மாட்டோம் என அவர்களுக்கு தெரிய வேண்டும். ஒரு நடிகனின் வேலை மற்றவர்களை காயப்படுத்துவது அல்ல, அவர்களை சிந்திக்க வைப்பது. சினிமா வேலை போதிப்பது அல்ல. மக்களை சந்தோ‌ஷப்படுத்துவது. ஆனால் அதேநேரம், படம் பார்த்த ஒருவர், தனது வீட்டிற்கு என்ன எடுத்து செல்கிறார் என்பதும் முக்கியம். அதேபோன்ற சர்ச்சைக்குரிய படங்களில் நான் நடிக்க மாட்டேன்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News