சினிமா

பிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட ரஜினி

Published On 2018-12-11 16:22 IST   |   Update On 2018-12-11 16:22:00 IST
ரஜினி பிறந்த நாளை முன்னிட்டு பேட்ட படத்தின் டீசரை நாளை வெளியிட இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. #Petta #Rajinikanth #PettaBirthdayTrEAtSER
'2.0' படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் ரஜினியுடன் விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

அனிருத் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் பாடல்கள் நேற்று முன்தினம் வெளியானது. இந்த பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து வரும் நிலையில், தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு 12-12-2018 (நாளை) பேட்ட படத்தின் டீசரை காலை 11 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். இது ரஜினி ரசிகர்களுக்கு சிறப்பு விருந்தாக அமைந்திருக்கிறது. #Petta #Rajinikanth #PettaBirthdayTrEAtSER


Tags:    

Similar News