சினிமா

25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து உருவான படம் சர்வம் தாளமயம் - ஜி.வி.பிரகாஷ்

Published On 2018-12-07 11:18 GMT   |   Update On 2018-12-07 11:18 GMT
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக வைத்து சர்வம் தாளமயம் படம் தான் உருவாகி இருக்கிறது என்று நடிகர் ஜி.வி. பிரகாஷ் தெரிவித்தார். #SarvamThaalaMayam #GVPrakashKumar
கோவையில் சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. அப்போது நடிகரும், இசையமைப்பாளரருமான ஜி.வி.பிரகாஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் படம் சர்வம் தாளமயம். சமூகத்ததில் அழிந்து வரும் கலை குறித்த படமாக இது அமைந்துள்ளது.

மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்தேன். எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை. புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது. அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில் அப்பகுதியே உருக்குலைந்துள்ளது வேதனை அளிக்கிறது.



அரசு மட்டும் முயற்சித்தால் போதாது, எல்லோரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்க வேண்டும். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினேன்.

மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும், பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக் கூடியது. அரசியலில் வருவதற்கு என்ற எண்ணம் உண்டா? என்ற கேள்விக்கு அரசியலுக்கு வரும் அளவுக்கு வயதும் அனுபவமும் என்னிடம் இல்லை இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நடிகை அபர்ணா பாலமுரளி, இயக்குநர் ராஜீவ்மேனன் ஆகியோர் உடன் இருந்தனர். #SarvamThaalaMayam #GVPrakashKumar #AparnaBalamurali

Tags:    

Similar News