சினிமா

பெயருக்கு முன்னால் ராதாரவி போடும் ‘டத்தோ’ பட்டம் போலியானது- சின்மயி புதிய சர்ச்சை

Published On 2018-12-02 11:57 GMT   |   Update On 2018-12-02 11:57 GMT
ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். அப்படி ஒரு பட்டம் அவருக்கு வழங்கப்படவில்லை என்று சின்மயி கூறியுள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. #Chinmayi #Radharavis

பினனணி பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது மீடூவில் பாலியல் புகார் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் டப்பிங் யூனியனில் இருந்து சின்மயி நீக்கப்பட்டார். இந்த யூனியன் தலைவர் நடிகர் ராதாரவி.

யூனியனுக்கு சந்தா தொகை செலுத்தாததால் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் வாழ்நாள் சந்தா செலுத்தி விட்டதாக சின்மயி கூறினார்.

யூனியனில் இருந்து நீக்கப்பட்டதால் டப்பிங் பேசும் வாய்ப்பும் சின்மயிக்கு கிடைக்கவில்லை. பட வாய்ப்புகள் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


தனது வாய்ப்புகள் பறிபோக காரணமான நடிகர் ராதாரவி மீது சின்மயி புதிய புகார் தெரிவித்துள்ளார். ராதாரவி தனது பெயருக்கு முன்னால் ‘டத்தோ’ என்ற பட்டத்தை போடுவார். இது மலேசியாவில் வழங்கப்படும் கவுரவ பட்டம்.

ஆனால் இந்த பட்டத்தை ராதாரவி தவறாக பயன் படுத்துகிறார். அவருக்கு அப்படி ஒரு பட்டமே வழங்கப்படவில்லை என்று சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மலேசிய நாட்டின் மெலேகோ மாநில அரசுக்கு எழுதிய கடிதத்துக்கு வந்த பதிலை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் ராதா ரவிக்கு அரசு எந்த பட்டமும் வழங்கியதாக ஆவணத்தில் இல்லை. இந்தியாவில் உள்ள நடிகர் ஷாருக்கானுக்கு மட்டுமே விருது வழங்கப்பட்டிருப்பதாக அரசு செயலர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே ராதாரவி பயன் படுத்துவது போலி பட்டம் என்று விமர்சித்துள்ளார். சின்மயி கிளப்பி இருக்கும் இந்த புதிய சர்ச்சை மீண்டும் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. #Chinmayi  #Radharavis

Tags:    

Similar News