சினிமா

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கும் ரியோ

Published On 2018-11-30 16:47 IST   |   Update On 2018-11-30 16:47:00 IST
சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கனா ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் ரியோ நாயகனாக நடிக்கிறார். #Sivakarthikeyan #RioRaj
சிவகார்த்திகேயன் டிவியிலிருந்து வந்து சினிமாவில் கொடிகட்டிப் பறக்கும் நடிகராக வளர்ந்து இருக்கிறார். 12 படங்களில் மட்டுமே இதுவரை நடித்துள்ள சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் அதிக வசூல் புரியும் டாப் 5 முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைந்துவிட்டார்.

படத்தில் நடிப்பதுடன், எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி கனா என்ற படத்தை தயாரித்துள்ளார். கனா படம் டிசம்பர் மாதத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் எஸ்.கே.புரொடக்‌‌ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்கும் இந்தப் படத்தின் மூலம் தொலைக்காட்சி புகழ் ரியோ நாயகனாக அறிமுகமாக உள்ளார். அவருக்கு ஜோடியாக சிரின் கஞ்சவாலா நடிக்கிறார். 



இவர்களுடன் ராதா ரவி, விக்னேஷ்காந்த் உள்ளிட்டோரும் பலரும் நடிக்க யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.

விக்ரம் பிரபு நடித்த சத்ரியன் படத்தில் ரியோ துணை நடிகராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Sivakarthikeyan #RioRaj

Tags:    

Similar News