சினிமா

அப்போ சூர்யா, இப்போ கார்த்தி

Published On 2018-10-31 19:53 IST   |   Update On 2018-10-31 20:00:00 IST
அப்போ சூர்யாவிற்காக குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம், இப்போ கார்த்திக்காக தேவ் படத்தில் குரல் கொடுத்திருக்கிறார். #Dev #Karthi #Suriya
கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தேவ்’. இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஆக்சன் திரில்லர் அட்வெஞ்சர் படமாக உருவாகும் இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லட்சுமண் தயாரித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒரு பாடலை பாடி இருக்கிறார் எஸ்.பி.பாலசுப்ரமணியம். இவர் இதற்கு முன் சூர்யாவிற்காக ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான ‘7ம் அறிவு’ படத்தில் ‘யம்மா யம்மா...’ என்ற பாடலை பாடியிருந்தார்.



இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டார். இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வைரலானது. #Dev
Tags:    

Similar News