சினிமா

விசுவாசம் படத்தில் அஜித்துக்கு போட்டியாக இரட்டை வேடம் போடும் பிரபல நடிகர்

Published On 2018-07-19 16:34 GMT   |   Update On 2018-07-19 16:34 GMT
விசுவாசம் படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருவது போல், பிரபல நடிகரும் இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. #Viswasam
சிவா இயக்கத்தில் அஜித் 4-வது முறையாக நடித்து வரும் படம் ‘விசுவாசம்’. ஐதராபாத்தில் தொடங்கிய இதன் முதல் கட்டப்படப்பிடிப்பு தற்போது முடிந்து அடுத்த கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், யோகிபாபு, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இவருடன் சேர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையாவும் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். 



இப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர், பொங்கல் திருநாளில் வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 
Tags:    

Similar News