சினிமா

விஸ்வரூபம் 2 ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2018-06-30 10:58 IST   |   Update On 2018-06-30 13:02:00 IST
கமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #Vishwaroopam2 #KamalHaasan
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்தில் இருந்து `நானாகிய நதிமூலமே' என்ற சிங்கிள் டிராக் ஒன்றை படக்குழு நேற்று வெளியிட்டது. 

ஜிப்ரான் இசையில், கமல்ஹாசன் எழுதி, பாடிய அந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். 

அத்துடன் அந்த பாடலின் முடிவில் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதன்படி, விஸ்வரூபம்-2 வருகிற ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நானாகிய நதிமூலமே பாடல்:


முன்னதாக படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஜூலையில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இந்த படத்தில் கமல் ஹாசனுடன் ஆன்ட்ரியா, ராகுல் போஸ், பூஜாகுமார், சேகர்கபூர், வகீலா ரகுமான் ஆகியோரும் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமும், ரவிச்சந்திரனின் ஆஸ்கார் பிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. #Vishwaroopam2 #KamalHaasan

Tags:    

Similar News