சினிமா

கல்லூரி மாணவர்களை ஆச்சரியப்படுத்திய அஜித்

Published On 2018-03-25 13:58 IST   |   Update On 2018-03-25 13:58:00 IST
சென்னை குரோம்பேட்டையில் உள்ள கல்லூரியின் மாணவர்களை நடிகர் அஜித் ஆச்சரியப்படுத்தி உள்ளார். #Thala #Ajith
மார்ச் 1ம் தேதி முதல் தயாரிப்பாளர்கள் ஸ்டிரைக் நடத்தி வருகிறார்கள். இதன் காரணமாக பல படங்கள் ரிலீசாகாமலும், படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் அனைத்தும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. 

படப்பிடிப்புகள் இல்லாததால் நடிகர்கள் நடிகைகள் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு சென்றுள்ளனர். இம்மாதம் தொடங்க இருந்த அஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பும் தள்ளிப் போகியிருக்கிறது. இந்த இடைவெளியை தனக்கேற்ற வகையில் மாற்றியிருக்கிறார் அஜித். 

அஜித்தின் நீண்ட நாள் ஆர்வமான ஏரோ மாடலிங்கில் கவனத்தை திருப்பியுள்ளார். இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்.ஐ.டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு சென்றுள்ளார்.



அங்கு ஏரோ மாடலிங் டிபார்ட்மெண்டை சேர்ந்த மாணவர்களிடம், தனது சந்தேகங்களை கேட்டறிந்திருக்கிறார். பின்னர், நீண்ட நேர காத்திருப்புக்கு பிறகு அவரை பார்த்த மாணவர்கள் 12 மணி நேரம் காத்திருக்கிறோம் என்று மாணவர்கள் கூற, அதற்கு அஜித் "உங்களை பார்க்க நான் 26 வருடமாய் காத்திருக்கிறேன்" எனக் கூறி மகிழ்வித்திருக்கிறார். 


இதனையடுத்து தனக்கு ஆலோசனை நடத்திய மாணவர்களுடன் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார் அஜித். இது மாணவர்களை ஆச்சரியப்படுத்தியிருகிறது.

Similar News